கடவத்தை, மஹகடே சந்தியில் இன்று (31) சனிக்கிழமை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை நோக்கிப் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதே சிறுவன் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சிறுவனின் முதுகெலும்புப் பகுதியில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
