நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார், வவுனியா மாவட்டங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
