அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் சர்வதேச அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் கட்டுப்பாட்டை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது.
வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலைகள், ஈரான் போர் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தேர்தல் பிரசாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்தத் தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் மட்டுமன்றி, அந்நாட்டின் எதிர்கால வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
