வங்காள விரிகுடாவில் உருவாகி தீவிரமடைந்துள்ள ‘முராசு’ (Murasu) புயல் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, நவம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் நவம்பர் 3ஆம் திகதி அதிகாலை வரையான காலப்பகுதியில் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே, ஒங்கோல் அருகே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படலாம் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
