Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

TIN பெற இனி IRD அலுவலகம் செல்லத் தேவையில்லை!

#TIN #TINCertificate #SriLanka #IRD #InlandRevenueDepartment #TaxpayerIdentificationNumber #இலங்கை_செய்திகள் #வரி_அறிவிப்பு #புதிய_நடைமுறை #அரசாங்க_அறிவிப்பு

நவம்பர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்

வரி செலுத்துநர் அடையாள இலக்கமான (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்குச் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லாத புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (04) நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அவர், வங்கிக் கணக்குகளைத் திறப்பது உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

புதிய நடைமுறை எவ்வாறு செயல்படும்?

புதிய நடைமுறையின்படி, TIN இலக்கம் இல்லாதவர்கள் தாங்கள் சேவையைப் பெறவுள்ள வங்கி அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தேசிய அடையாள அட்டையின் பிரதி, செயற்பாட்டிலுள்ள தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க முடியும்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டு TIN பதிவுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பதிவு நிறைவடைந்ததும், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு TIN இலக்கம் அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே TIN இலக்கம் வைத்திருப்பவர்களும், புதிதாகப் பதிவு செய்பவர்களும் இந்த நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையச் சேவை ஊடாகவும் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி TIN விபரங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 1 முதல் TIN கட்டாயமாக்கப்பட்டுள்ள 8 நடவடிக்கைகள்

  1. வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்குத் திறத்தல்.

  2. கடன் அட்டை (Credit Card) பெற்றுக்கொள்ளுதல்.

  3. கட்டிட வரைபட அனுமதி பெற்றுக்கொள்ளுதல்.

  4. மோட்டார் வாகனப் பதிவு.

  5. வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல்.

  6. காணி மற்றும் சொத்துப் பதிவு.

  7. வணிகப் பதிவு.

  8. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல்.

முக்கிய அறிவிப்பு!

TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டப்பூர்வக் கட்டாயம் நீக்கப்படவில்லை. மாறாக, அதனைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை எளிமைப்படுத்தவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விரைவில் வெளியிடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்தை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக நிராகரிப்பு

ஜூலை 29, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் “Cockroach Janata Party” போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைப்பு

அக்டோபர் 11, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நவம்பர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு நாட்களில் 24 பேர் பலி!

ஜூன் 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube