அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட Amazon Prime Air நிறுவனத்தின் Boeing 767 சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று தரையில் பயணித்த வாகனங்கள் மீது மோதியுள்ளது. இதனால் தீப்பரவலும் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்ததாகவும், அவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
