Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறிய குடும்பங்களுக்கு வீடு!

#Colombo #HousingProject #PoorFamilies #NewHomes #SriLankaNews #CommunityDevelopment #SocialWelfare #PublicService #DevelopmentNews #BreakingNews

ஆடி 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கொழும்பு 14, நவகம்புர பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முதற்கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (15) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் இந்த புதிய வீட்டிற்கான அடிக்கல்லை, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாட்டி வைத்தார்.

நாடளாவிய ரீதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் நோக்கில், தற்போதைய ஜனாதிபதி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் விசேட எண்ணக்கருவுக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், மிகவும் வறிய பின்னணியைக் கொண்ட குடும்பங்களை இனங்கண்டு, அவர்களின் உழைப்பையும் இணைத்து நிலையான மற்றும் அழகான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் இலங்கை முழுவதும் சுமார் 10,000 வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

கொழும்பு நகர எல்லையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதில் உள்ள நிலப் பற்றாக்குறை மற்றும் ஏனைய திணைக்களங்களின் அனுமதி போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, கொழும்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் 6-வது வீடு இதுவாகும்.

நவகம்புர வட்டாரத்தைச் சேர்ந்த வேலுராணி என்ற பயனாளிக்கே இப்புதிய வீடு அமையவுள்ளதுடன், இதற்கான முழுமையான பரிந்துரையை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கியிருந்தார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர், நவகம்புர வட்டார இளைஞர் மற்றும் மகளிர் அணித் தலைவிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கொழும்பில் வசிப்பவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல என்றும், இங்கு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தகைய நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த 10 இலட்சம் ரூபாய் நிதியுதவியானது பயனாளியின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டதுடன், புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடைந்து பயனாளி தனது குடும்பத்துடன் குடியேற வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

 இலங்கையின் காலநிலையை பாதிக்கவுள்ள எல் நினோ – விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம்!

ஆனி 3, 2026
இலங்கை

மாத்தளையில் மகனால் தந்தை கொலை!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube