கட்டுநாயக்க – தெவமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறித்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இனம் தெரியாத இருவர் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
