Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிவனொளிபாதமலை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கேபிள் கார் வசதி!

Adam's Peak | Tourism Place | Cable car | Srilanka | Quick Tamil News

சித்திரை 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய வகையில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா செயலணிக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

சிவனொளிபாத மலையை மையப்படுத்தி கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும், அதற்கு மேலதிகமாக கிகிலியாமான, எல்ல உள்ளிட்ட மேலும் சில சுற்றுலாத் தலங்களும் இவ்வாறான கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிக்கக்கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இந்த இடங்களில் அந்தத் திட்டத்தை ஆரம்பிப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அதற்குத் தேவையான ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், மற்றும் இது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்படவேண்டிய அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மே மாதம் 25ஆம் திகதி முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த வசதியை வழங்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யால உள்ளிட்ட 19 வனவிலங்கு சரணாலயங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்கள் அனைத்திலும் உள்ள மலசலகூடங்கள் உள்ளிட்ட சுகாதார வசதிகளின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டதுடன், அந்த இடங்களில் புதிய மலசலகூடங்களை நிர்மாணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் கொள்ளுப்பிட்டியிலிருந்து கடற்கரை வீதி ஊடாக, சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் சுற்றுலா வலயம் ஒன்றை நிறுவுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம் சுமார் 2000 முதல் 3000 வரையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஐ.எல்.நசீர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நிலுஷி அபேவிக்ரம, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காவத்தை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் பகிரங்கப்படுத்துவேன் – மனோ கணேசன்!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“முழு நாடுமே ஒன்றாக” என்ற செயற்திட்டத்தினூடாக 748 பேர் போதைப்பொருளுடன் கைது!

வைகாசி 2, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சூரியவன்ஷி

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube