Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒத்திவைப்பு!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (16) வியாழக்கிழமை பகல் 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், சிவஞானம் ஸ்ரீதரன் , அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிச்சி மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு திருவையாறு பகுதியில் விவசாய அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுதாணிய மற்றும் நிலக்கடலை உற்பத்தி அபிவிருத்தி திட்டம் கைவிடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்துடன் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஆற்றொதுக்கு காணியை ஆக்கிரமிப்பு செய்து தனது வீட்டுக்குச் செல்லும் வீதிக்கு 3.5 மில்லியன் அரச நிதியில் பாலம் அமைத்துள்ளமை தொடர்பாகவும், இதற்கு அதிகாரிகள் துணைபோயுள்ளதாகவும், உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சுனா இராமநாதன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குழப்பம் ஏற்பட்டதால் குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டு பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறியுள்ளார் அத்துடன் அரச அதிகாரிகளும் இக் கூட்டத்திலிருந்து வெளியேறி இருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல் : கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சர்வதேச ரக்பி திருவிழா!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை!

ஐப்பசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 25-35 ஆக திருத்துமாறு கோரிக்கை

புரட்டாதி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube