Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சியின் தீர்வு நம்பிக்கையில்லா பிரேரணை!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் எழும் எந்தவொரு சாதாரணப் பிரச்சினையையும் அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தி, ஜி. எல். பீரிஸின் இல்லத்தில் கூடி நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தயாரிப்பது எதிர்க்கட்சியினரின் வாடிக்கையாகிவிட்டது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் டெங்கு நோய் பரவல், சிறைச்சாலை நெருக்கடிகள், வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் அல்லது நிலக்கரி கப்பல் வருகை தாமதமாவது போன்ற எந்தவொரு விடயம் ஊடகங்களில் செய்தியாக வந்தாலும், எதிர்க்கட்சியினர் உடனே பதறியடித்துக்கொண்டு ஜி. எல். பீரிஸின் வீட்டிற்கு ஓடுகிறார்கள்.

அங்கு ஒன்று கூடி கலந்துரையாடிவிட்டு, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தயாரிப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால், அவ்வாறு திட்டமிட்டுத் தயாரிக்கப்படும் பிரேரணைகளில் பெரும்பாலானவை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதே இல்லை.

கடந்த காலத்தில் பிரதமருக்கும் கல்வி அமைச்சருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்போவதாகக் கூறி, கல்வி அமைச்சுக்கு முன்னால் உபவாசப் போராட்டங்களை நடத்தி நாடகமாடினார்கள்.

இறுதியில் அந்தப் போராட்டங்களும் கைவிடப்பட்டு, பிரேரணைகள் பற்றிய பேச்சே இல்லாமல் போனது. எனவே, இவ்வாறான வெற்றுப் பிரேரணைகளால் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு மரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு கிரானில் கோயில் உற்சவத்தின் போது வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா’ புயல் சேதம்: அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணை!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube