மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடுபல வீதி பகுதியில், நேற்று (19) காலை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 200 போத்தல் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
