கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டு சென்ற சூரியகாந்தி விதையை பகிர்ந்து உட்கொண்ட 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை சூரியகாந்தி விதையை சக மாணவர்களுடன் பகிர்ந்து உட்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அந்த உணவை உண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 ஆண்பிள்ளைகளும், 2 பெண்பிள்ளைகளும் அடங்குகின்றனர். இதில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த மாணவன் வழமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்குக் கொண்டுச் சென்று பகிர்ந்து உண்பது வழமை எனவும், இன்றைய தினம் (20) சூரியகாந்தி விதைகள் என நினைத்து சூரியகாந்தி விதைகளுடன் வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் கொண்டுசென்று பகிர்ந்து உண்டுள்ளார் எனவும், இதனாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
