மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனகஹயாய குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
நீராடிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கியுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மஹவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
