Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் பொது சந்தையில் ஏற்பட்ட பதற்றம்!

#Hatton #HattonMarket #SriLanka #BreakingNews #NewsUpdate #PublicMarket #Tension #LocalNews #SriLankaNews #LatestNews

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் பொது சந்தை வளாகத்தில் நடைபாதையை மறித்து, அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டு வியாபாரம் செய்த கடைகளை அகற்றுவதற்கு முற்பட்ட போது, ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள ஹட்டன் பொது சந்தை வளாகத்தில், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகளுக்கு வெளியே தட்டுகளை அமைத்து வியாபாரம் செய்த வர்த்தகர்களின் புதிய கட்டுமானங்களை அகற்றுவதற்கு முற்பட்ட போதே, இன்று (20) ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் இந்த பதற்றமான சூழல்ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் வருமானக் நிர்வாகி உள்ளிட்ட அதிகாரிகள், இந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுமாறு குறித்த வர்த்தகர்களுக்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

எனினும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது நடைபாதையை மறித்து வியாபாரம் செய்தமையினால், ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் இன்று அந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றி வந்த வேளையில், பொது சந்தை வர்த்தகர்கள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு, அந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நகரம் முழுவதிலும் உள்ள இவ்வாறான அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுமாறும், ஒரு குறிப்பிட்ட வர்த்தகப் பிரிவினரை மாத்திரம் இலக்கு வைத்து அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவது நியாயமற்றது என்றும் அந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொது சந்தை வளாகத்தில் சில வர்த்தகர்கள் மற்றும் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் சில கடைகளில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பல பாகங்களுக்கு இடியுடன் கூடிய மழை!

ஆனி 15, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி . சௌத்ரி சாலை விபத்தில் காலமானார்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் – ஜனாதிபதி!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீதுவை ஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube