Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

இந்திய உயர்மட்டப் பிரதிநிதி அடுத்த வாரம் இலங்கை விஜயம்!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்திய வெளிவிவகார உயர்மட்டப் பிரதிநிதியொருவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு தமிழ்பேசும் அரசியல் கட்சிகள், தங்களது சுயாதீனத்துவம் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளைப் பேணிக்காத்தபடி, தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த ஆறு கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்திய உயர்மட்டப் பிரதிநிதியை கூட்டாகச் சந்தித்து முக்கிய அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்தில் குடியேறும் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது

ஆவணி 10, 2026
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பொலிஸார் பலி!

வைகாசி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதயாத்திரை நாயை தாக்கியவர் கைது!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube