சட்டவிரோத மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 1,850 லீற்றர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் மொரொந்துடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மாவல – தொட்டுபல பகுதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்தக் கோடா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வாந்துவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரொந்துடுவ பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
