திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் தித்வா வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (29) ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது தித்வா வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையம் ,சிறுகைத்தொழிலாளர்கள்,ஆலயங்கள் மற்றும் வீடுகளுக்கான இறுதி நஷ்டஈடு பெறுவோர் என 84 பேருக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முதன்மை அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
