கிரேக்கத்தின் பிரதான நிலப்பரப்புகள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் உட்பட பல பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிரேக்கத்தின் கிரீட் தீவில் பரவியுள்ள தீயினால் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் நிலப்பரப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், சுமார் 8,000 பேர் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், மத்திய கிரேக்கப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இவற்றுக்கு மேலதிகமாக பரோஸ், ஆண்ட்ரோஸ் மற்றும் கலிம்னோஸ் ஆகிய தீவுகளிலும் காட்டுத்தீ பரவியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வெப்ப அலை, காட்டுத்தீ வேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
