பேராதனைப் பல்கலைக்கழகத்தின் “சரசவி மெதுர” (Sarasavi Medura) விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் மகாவலி கங்கைப் படுகையின் நீர்மட்டம் உயர்வடையும் அபாயத்தைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதிகளிலும் பல்கலைக்கழக வளாகத்திலும் தங்கியுள்ள ஏனைய மாணவர்களையும் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால், மகாவலி கங்கைப் படுகையை ஒட்டியுள்ள பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் அது குறித்து அவதானமாக இருக்குமாறு அனர்த்த மேலாண்மை மத்திய நிலையம் இன்று (03) அறிவித்துள்ளது.
