Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

தொல்லியல் மூலம் நிலங்கள் பறிப்பு? – சிறிநாத் குற்றச்சாட்டு!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வடகிழக்கில் தொல்லியல் நடவடிக்கைகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்டு கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர், தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வாதார நிலங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், மாகாண சபைகள், மேய்ச்சல் நிலங்கள், விவசாயம், மீன்பிடித் துறை மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் அரசின் செயற்பாடுகள் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார்.

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

VAT வரி வரம்பில் மாற்றமில்லை!

ஆனி 23, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பன் விழாவில் ஜனாதிபதி அனுராவுக்கு “கம்பன் புகழ் ” விருது!

வைகாசி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்வானிலை

களனி கங்கை : வெள்ள எச்சரிக்கை!

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் கடும் அழுத்தம்! சுகாதார நெருக்கடி!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube