அக்கரப்பத்தனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையினால், அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியை அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி நேரில் பார்வையிட்டதுடன், வீதியை சீரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

