Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலையால் உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, பொல்பிட்டிய மொரஹெனகம பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வட்டவளை – ஞானானந்தகம வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்றைக் கடந்து செல்லும் போது மஹாவலி ஆற்றில் தவறி விழுந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டிய சோலங்கந்த ஜனஉதான கிராமத்தில் கடையொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நாவலப்பிட்டிய பஸ்பாகே கோரளை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனை அம்பகமுவ பகுதியில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர் அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் மந்தகதியில்!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube