Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனமழை காரணமாக இடிந்து விழுந்த கட்டடங்கள்

#மலையகம் #கனமழை #கட்டடஇடிவு #சீரற்றவானிலை #இயற்கைஅனர்த்தம் #மழை #இலங்கைசெய்திகள் #BreakingNews #TamilNews #SriLankaNews

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நோர்ட்டன் பிரிட்ஜ் மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நோர்ட்டன் பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியின் கிரிவான்எலியா பகுதியில் இன்று (04) ஒரு வீடு, ஒரு கடை மற்றும் சாலையோரமுள்ள பல இடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதேவேளை, பெரிய கற் பாறைகள் சரிவு மற்றும் நிலச்சரிவுகளால் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான சாலையில் விழுந்துள்ள நிலச்சரிவுகளையும் பாறைகளையும் அகற்றுவதற்கு நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு அபாயம் காரணமாக நோர்ட்டன் பிரிட்ஜ் – சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடைத்தாங்கள் முகாமில் 15 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பொது மக்களை, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி, ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஞ்சுள சுரவீர ஆரச்சி, அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

17 வெற்று கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதப்பதாக எச்சரிக்கை!

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

ஆடி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் தாக்குதல்: தவறு என ஈரான் ஒப்புதல்!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி கண்டெடுப்பு

புரட்டாதி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube