Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்ட 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட 06 அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (05) திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையையும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளையும் பாதிக்கும் வகையில், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குறித்த கருத்துகளை வெளியிட்டவர்களில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இவ்வாறான கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கக்கூடும் எனவும், 2026ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி முதல் ஒளிபரப்பான சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கைதான ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பற்றி எரிந்தது!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு தனியார் பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

ஆனி 9, 2026
இலங்கைவிளையாட்டு

தேசிய விளையாட்டு விழா நடைப்போட்டியில் ருக்மால், கல்ஹாரி சாம்பியன்!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube