Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிணறு தோண்டுவதாகக் கூறி புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வத்தேகம, பிட்டியேகெதர – வலல வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறம் கிணறு வெட்டுவதாகக் கூறி புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில பண்டாரவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் குறித்த வீட்டின் உரிமையாளர் என்பதோடு, மற்றைய இரு ஆண்களும் மஹியங்கனை மற்றும் மாவில்மடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இந்த குழி தோண்டப்பட்டுள்ளதாகவும், அது சுமார் 20 முதல் 25 அடி வரை ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாராசரி கிணறு வெட்டும் பணி என்றே குறித்த பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், அங்கு கண்டெடுக்கப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் குழி தோண்டப்பட்டிருந்த விதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், சில சமயங்களில் கல்வெடிச் சத்தங்கள் கேட்பதாகவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சோதனையின் போது நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார், 2 அங்குல விட்டம் கொண்ட நீர் குழாய்கள், ஏணி, சுமார் 40 அடி நீளமான 4 கயிறுகள், கடல் மணல், சாம்பிராணி (தும்மல) மற்றும் தீப்பந்தங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை (06) பன்விலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழப்பு-வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஆடி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசுக்கு 44 கோடி ரூபா இலாபம்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலைகுறைப்பு!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube