2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு முதல் கட்டம் செப்டம்பர் 2ஆம் திகதி நிறைவடையும்.
அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 4ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
