10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த விலைத் திருத்தம் நாளை (8) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பூண்டு கிலோ ஒன்றின் விலை ரூ.699 இலிருந்து ரூ.649 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.259 இலிருந்து ரூ.224 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.259 இலிருந்து ரூ.239 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
