வடக்கின் தென்னை முக்கோண வலையமான முல்லைத்தீவு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரினால் காசோலைகள் மற்றும் தென்னம்பிள்ளைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) முல்லைத்தீவு முள்ளியவளை ஷிச்சிராபுரம் பகுதியில் உள்ள ஆச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்,
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் – தேசிய தென்னை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலை மற்றும் தென்னம்பிள்ளை வழங்கும் நிகழ்வு சிறப்புற நடை பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 443 மானியம் பெறும் பயனாளிகளுக்கும் 72 சிறப்பு தென்னை நில மறுவாழ்வுத்திட்டத்தின் கீழ் மானியம் பெறுபவர்களுக்கமாக 22.7 மில்லியன்ரூபாமதிப்பிலான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கூட்டுறவு கௌரவ பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வடமாகாண ஆளுனர் வேதநாயகம் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலர், தென்னை பயிர்ச் செய்கைச் சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு
