Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் டுவாப்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!

Ukraine | Attacked | Russian oil refinery | Ukraine - Russia war | QuickTAmilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ரஷ்ய – உக்ரைன் போர் 5 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான டுவாப்ஸ் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 16ஆம் திகதிக்குப் பிறகு டுவாப்ஸ் துறைமுகம் இலக்கு வைக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிசக்தி உற்பத்தித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கடல் மட்டத்தில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள கடற்கரைகள் மாசடைந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் டுவாப்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

கடற்கரை ஓரங்களில் கசிந்துள்ள சுமார் 13,300 கன மீட்டர் எரிபொருள் மற்றும் மாசுபட்ட மண்ணை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குழாய் நீரைக் குடிக்க வேண்டாம் என்றும், போத்தல் நீரை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மே தின விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை (1) அன்று மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உள்ளூர் மக்கள், மாஸ்கோவில் உள்ள மத்திய அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இந்த நிலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

போர் முடிவுக்கு வராத சூழலில், ரஷ்யா உக்ரைனின் மின் நிலையங்களைத் தாக்கி வரும் நிலையில், உக்ரைன் பதிலுக்கு ரஷ்யாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எரிசக்தித் தளங்களைத் தாக்கி வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு தீவைத்த வைத்தியர் – பாணந்துறையில் சம்பவம்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்றுமுதல் தனியார் பேருந்து சேவைகள் குறைந்தளவிலேயே இயங்கும்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாயின் விலை வீழ்ச்சி

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 31,000 பேர் பாதிப்பு !

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube