இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த எட்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்படாமையே இந்தப் பணிப்புறக்கணிப்புக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பயணச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், 600 ரூபாய் கொடுப்பனவு போதுமானதாக இல்லை எனவும், அதனை அதிகரிக்க வேண்டும் எனவும் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
