போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மெடிரிகிரிய தொகுதி பலமண்டலத் தலைவர் சிந்தக டெரன்ஸ் விஜேரத்னவை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய அவரது மனைவியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி ஹிங்குரக்கொட, தொரதெக சந்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் மற்றும் 15 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
