Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தேர் திருவிழா!

ஆவணி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விசேட கிரியை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து, மாமாங்கேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்போது பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் தேர் உற்சவம் கோலாகலமாக இடம்பெற்றது.

மஹோற்சவம் கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், இன்று விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பஞ்சமுக விநாயகருக்கான வசந்த மண்டப வழிபாடுகள் இடம்பெற்றதுடன், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

பின்னர் வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணித்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையையும், பிதுர்க்கடன் தீர்க்கும் புனித தீர்த்தக் கேணியையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது.

இந்நிலையில், ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை (12) நண்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் பயணிகளுக்கான விசேட போக்குவரத்து இன்று தொடர்கிறது!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் மீளாய்வு மனுவை விசாரணைக்கு ஏற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சலே, கடவுச்சொற்களை வழங்காமைக்கான காரணங்களை வௌிப்படுத்திய கம்மன்பில

ஆடி 2, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

சமூகவலைத்தள பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயது 15 – ஐக்கிய அரபு இராச்சியம்

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube