Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதலில் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் பலி!

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02.05.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய தயானந்தராஜா வசந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நான்கு பிள்ளைகளின் தாயான இவர், இன்று அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் நின்றபோது, அங்கு நுழைந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ​இச்சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிக பலத்த மழை!

ஆடி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்!

ஆடி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 180,000 அபராதம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரித்தானிய பெண் கைதி ஷார்லட் மே லீ பாதுகாப்பாக உள்ளார்: சிறைச்சாலை அதிகாரிகள் அறிவிப்பு!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube