Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 இலட்சம் ரூபா பெறுமதியான 19892 புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்ற சாரதி கைது

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் விநியோக மையங்களுக்குச் சென்றடையாமல் பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பியகம பகுதியில் வைத்து புத்தகங்களை விநியோகத்திற்காகப் பொறுப்பேற்ற பாரவூர்தி சாரதி ஒருவர், அவற்றை விநியோகிக்காமல் தனது வீட்டில் சேமித்து வைத்து, பின்னர் பழைய பேப்பர் சேகரிப்பாளரிடம் 1,600 கிலோகிராம் எடைக்கு ரூ. 47,000-க்கு விற்றுள்ளார்.

அவ்வாறு வாங்கப்பட்ட புத்தகங்கள் பேலியகொட பகுதியில் உள்ள காகிதங்களை அரைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, அரைக்கப்பட்ட பின்னர் சில நாட்களில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, 31 வயதுடைய சந்தேகநபரான பாரவூர்தி சாரதியைக் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஆவணி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க இலக்குகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்குதல்

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்களில் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube