Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு!

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும், 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா அவர்களும் பங்குபற்றினார்கள்.

இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் தலையுரையினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்களினால் கருத்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களினால் சிறப்புரையாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா ரூபா 02.00 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்படும் 827 வீடுகளில் செவ்வாய்க்கிழமை (16) 125 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூபா 400,000.00 வீதம் காசோலை வழங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளில் முதற்கட்டமாக 180 பயனாளிகளுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கை

இலங்கை உட்பட 10 நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு: குவைத் புதிய கட்டுப்பாடு!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“பிரஜா சக்தி” ஜனநாயகத்தின் முக்கிய தருணம்!

ஆனி 2, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது!

வைகாசி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube