Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாயின் இறுதிக்கிரிகைக்கு செல்ல மறுத்துள்ள பெக்கோ சமன்

ஆவணி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த 12 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பெக்கோ சமனின் தாயாரின் இறுதிக்கிரிகைகளில், நேரில் சென்று அஞ்சலி செலுத்த பெக்கோ சமன் மருத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், அவர் இறுதி அஞ்சலி செலுத்துவதை நிராகரித்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

பெக்கோ சமனின் தாயார் 12ஆம் திகதி மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

‘கரந்தெனிய சுத்தா’ என்பவரால் இக்கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான பின்னணியில், வெலிசர அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘பெக்கோ சமனிடம்’ அவரது தாயாரின் படுகொலை தொடர்பான தகவலைச் சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன்போதே, அவர் தனது தாயாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் செல்வதை மறுத்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் நலன் விசாரிப்பதற்காக அவரைப் பார்க்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என தாயாரை ‘சுத்தா’ அச்சுறுத்தியிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து மகனைப் பார்க்கச் சிறைச்சாலைக்குச் சென்று வந்துள்ளார்.

இதுவே தாயாரின் படுகொலைக்கு மற்றொரு முக்கிய காரணியாக அமைந்திருக்கலாம் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்தேகமயில் கைவிடப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக பரவும் போலியான தகவல்

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் நாளை!

வைகாசி 18, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube