Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ் நிறுத்தங்களை மறைக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

ஆவணி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பஸ் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பஸ் நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பஸ் சாரதிகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பஸ் நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 17 வயது சிறுவன் பலி : 4 பேர் படுகாயம்

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

NDB வங்கி நிதி மோசடி – 13.5 பில்லியன் ரூபா சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் அம்பலம்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று பல பகுதிகளில் உயர் வெப்பநிலையும், சில பகுதிகளில் மழைவீழ்ச்சியும் பதிவாகும்!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரட்டைக் கொலை குற்றவாளி கைது!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube