Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டக்குழி குடா மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி

ஆவணி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கற்பிட்டி கண்டக்குழி குடாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கற்பிட்டி கண்டக்குழி குடாவின் வீதி வழியாக மோட்டார் சைக்கிள் தந்தையும் மகனும் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அச்சமயம் எதிர்பாராத விதமாக பின்னால் பொலிஸ் ஜீப் ஒன்று வருவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் செலுத்திய தந்தை பதற்றமடைந்து மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோதி மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய துஷ்மந்த ரக்ஷபக்ச (வயது 40) மற்றும் அவரது 7வயது மகன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு விபத்து நடந்த தருணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரினதும் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த விபத்து தொடர்பாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிசாலையில் தீ

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை தொழில்முனைவோருக்கு அவுஸ்திரேலிய எம்.பியின் பாராட்டு!

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில “அனுபுதூ வந்தனா” பொசன் மண்டலம் பிரதமரின் தலைமையில் ஆரம்பமானது!

ஆனி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து கடைகளில் பணம் கோரிய குழு தொடர்பில் புகார்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube