Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

1,000 கோல்கள் என்ற வரலாற்று சாதனையை எட்டுவாரா ரொனால்டோ?

ஆவணி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

41 வயதான போர்த்துக்கல் அணியின் தலைவர், தனது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான கால்பந்து பயணத்தை நிறைவு செய்யும் வகையில், எதிர்வரும் ஆண்டே தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

“இது எனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம். நான் ஒரு சிறப்பான மரபை விட்டுச் செல்ல விரும்புகிறேன்” என அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கழக மற்றும் நாட்டுக்காக இதுவரை 976 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, வரலாற்றில் 1,000 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 24 கோல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

2002ஆம் ஆண்டு Sporting CP அணியுடன் தனது கால்பந்து வாழ்க்கையைத் ஆரம்பித்த ரொனால்டோ, பின்னர் Manchester United, Real Madrid மற்றும் Juventus அணிகளுக்காக விளையாடினார்.

தற்போது சவூதி புரோ லீக் அணியான Al-Nassr அணிக்காக விளையாடி வருகிறார்.

ஓய்வு பெறுவது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட அவர், கால்பந்திலிருந்து விலகிய பின்னர் அதிகமாகப் பயணம் செய்வது, விளையாடுவது மற்றும் வாழ்க்கையை அனுபவிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரொனால்டோ, தனது இறுதி பருவமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் 1,000 கோல்கள் என்ற வரலாற்று சாதனையை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனையில் மொட்டைமாடியில் கஞ்சா தோட்டம்

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம்

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதமொன்று தடம்புரண்டதால் சேவைகள் தாமதம்!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube