Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அக்டோபர் 01 முதல் கட்டாய அமுலுக்கு வரும் ‘வெட் ‘ கொடுப்பனவு பட்டியல்

ஆவணி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி அல்லது ‘வெட் ‘ கொடுப்பனவு படிவமானது அக்டோபர் 01 ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிக்கப்பட்ட விவரக்குறிப்புகளுக்கு அமைவாக தங்களது கணக்கியல் மற்றும் கொடுப்பனவு அமைப்புகளை தயாரித்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த கொடுப்பனவு படிவத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வர்த்தக சமூகம் மற்றும் வரி செலுத்துவோர் தங்களது அமைப்புகளை தயார் செய்து கொள்வதற்காக அவகாசம் வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வரி வசூலிப்பு முறையை சீரமைக்கவும், வரி வலையமைப்பின் வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும் கடந்த மார்ச் 27 ஆம் திகதி இந்த புதிய கொடுப்பனவு வடிவம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இருப்பினும், இதற்காக நிறுவன மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளை புதுப்பிக்க வேண்டியுள்ளதாக வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அக்கோரிக்கைகளை பரிசீலித்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிக்கப்பட்ட விவரக்குறிப்புகளுக்கு அமைவாக தங்களது கணக்கியல் மற்றும் கொடுப்பனவு அமைப்புகளை தயாரித்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி கொடுப்பனவு பயன்பாட்டைத் தடுப்பது, பரிவர்த்தனைகளை உடனுக்குடன் கண்காணிக்கும் திறன் மற்றும் வரி கசிவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

WhatsApp-இல் மீண்டும் ChatGPT

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார வேலியில் சிக்கி பெண்ணொருவர் பலி!

ஆனி 15, 2026
இலங்கைவானிலை

கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube