வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தின் உப கருத்திட்டம் (1) இன் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் ADB-க்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிதி வர்த்தக வசதிகளை மேம்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் கைத்தொழில் துறையின் போட்டித்திறனை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும்.
