ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்றைய தினம் (21) காலை முன்னிலையானார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமையவே அவர் அங்கு சென்றுள்ளார்.
