(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்றிரவு நடந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மேலுமொரு சிறுவன் இன்று அதிகாலை உயிரிழந்ததோடு 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் சிகிச்சை பெறுவோரில் 3 சிறுமிகளும் இரு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
நேற்றிரவு சுமார் 9.21 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் கோட்டைக்கல்லாறு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியால் பயணிக்கும் போது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஒன்றோடொன்று மோதி பாரிய விபத்தை சந்தித்த நிலையில் இவ் விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்று பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீதியை கடப்பதற்கு காத்திருந்த O/l மாணவிகள் 3பேர் மீது மோதியது.
இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் கிஷோன் எனும் 18 வயது இளைஞன் சம்பவ இடத்தில் பலியானதுடன் 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கதிஷன் எனும் 17 வயது சிறுவன் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
