இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 503 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
முதல் நாள் முடிவில் 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளில் தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது. துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 503 ஓட்டங்களுக்கு இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், கேசர நுவந்த மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது.
லஹிரு உடாரா 1 ஓட்டத்திலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்த நிலையில், மந்தமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களுடன், இந்திய அணியை விட 495 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
