Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திபெத் பகுதியில், போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653

மின்னஞ்சல்: [email protected]

நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

May be an image of text that says "Timure Syabrubesi All Lankans strongly Nationals travelling residing Exercise Bhote serious safety concerns along downstream sections Rasuwa. Nuwakot, Dhading, Gorkha, Chitwan. remain vigilant The Bhote Koshi other locations significant Trishuli along Bhote Koshi Trishuli river corridors Embassy higher situation hotel, streams, safer ground clearer. Postpone guide, and local tourism ocal authorities. travel districts until official any affected until further notice. Contact: confirm that road nationals requiring Emergency Hotline: Email flood threat has Embassy officials facilitation are encouraged available around contact clock Stay safe and follow official updates closely, Lankan Embassy provide support Kathmandu immediately. Lankan citizen currently Nepal. Embassy"

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் பெரிய வாளிக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா ஆற்றினை அண்டிய பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படலாம்!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் 2

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube