Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்றுடன் நிறைவுக்கு வரும் கண்டி எசல பெரஹரா

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் ‘தீர்த்தோற்சவம்’ இன்று (28) காலை கோட்டம்பையிலுள்ள மகாவலி கங்கையில் முறைப்படி நடைபெற்றது.

எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று வியாழக்கிழமை (27) சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, நாத, விஷ்ணு, கதரகம மற்றும் பத்தினி ஆகிய நான்கு பிரதான தேவாலயங்களின் ஊர்வலங்கள், பாரம்பரிய சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதற்காகத் தத்தமது தேவாலயங்களைச் சென்றடைந்தன.

அதன் பின்னர், கட்டுகெலே வீதி வழியே பயணித்து கோட்டம்பை மகாவலி கங்கையை நோக்கிச் சென்றடைந்தன.

அங்கு வழக்கமான தீர்த்தோற்சவச் சடங்குகள் நிறைவடைந்ததும், ஊர்வலம் கண்டி கணதேவி கோவிலை நோக்கிச் சென்று, பின்னர் அஸ்கிரிய கெடிகே ரஜமஹா விகாரையை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து, பகல் பெரஹரா இன்று பிற்பகல் 2.18 மணிக்கு வடக்குத் திசையை நோக்கி அஸ்கிரிய கெடிகே ரஜமஹா விகாரையிலிருந்து புறப்படவுள்ளது.

இந்த ஊர்வலம் டி.எஸ். சேனாநாயக்க வீதி, பன்சல வீதி மற்றும் தேவ வீதி வழியாகப் பயணித்து, ராஜா வீதியை அடைந்து ஸ்ரீ தலதா மாளிகை சதுக்கத்தைச் மூன்று முறை வலம் வரவுள்ளது.

ஊர்வலத்தின் நிறைவில், புனித தாதுக்கள் பிற்பகல் 4.01 மணிக்கு வடக்குத் திசையை நோக்கி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் எழுந்தருளப்பண்ணப்படும்.

பெரஹரா நிறைவடைந்ததும், தியவதன நிலமே மற்றும் நான்கு தேவாலயங்களின் பாஸ்நாயக்க நிலமேக்கள் இணைந்து ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாகச் செல்வார்கள்.

அங்கு, எசல பெரஹரா விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

அதன்பின்னர், பெரஹரா ஊர்வலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்குக் கௌரவ விருதுகள் வழங்கப்பட்டு, இவ்வாண்டிற்கான கண்டி எசல பெரஹரா விழா உத்தியோகபூர்வமாக நிறைவடையும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ICC வருடாந்த தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் – இலங்கை அணி 9 வது இடத்தில்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இத்தாலியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 இலட்சம் பெறுமதியான 64 புறாக்கள் சுங்கத்தால் பறிமுதல்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீரவே – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்!

வைகாசி 9, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய மானிய உதவியில் இரு மாதிரி கிராமங்கள் மக்கள் வசம்!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube