Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருந்தூர் விகாரை பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள பணியில் அமர்த்துமாறு கடிதம்

ஆவணி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

குருந்தூர் விகாரையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து மீளழைத்தமை தொல்பொருட்கள், தொல்பொருள் காப்பகம் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதி என்பன கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன . ஆகவே பொலிஸ் உத்தியோகத்தர்களை மீண்டும் பாதுகாப்புக்கு அமர்த்துமாறு குருந்தூர் விகாரை விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர்,புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குருந்தூர் விகாரை வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக தங்கியிருந்ததுடன், தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து மீளழைத்தமை தொல்பொருட்கள், தொல்பொருள் காப்பகம் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதி என்பன கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

அவ்வப்போது இவ்வாறான இடங்களுக்கு பல்வேறு குழுக்கள் பல்வேறு போராட்டங்கள் போன்றவற்றுக்காக வருகை தந்தபோதிலும்,அவற்றைத் தடுப்பதற்கான சிவில் பாதுகாப்பு அதிகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே உள்ளது.

எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து மீளழைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை மீண்டும் சேவைக்கு அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

எகிப்திற்கு பரவிய போர் பதற்றம்.. துறைமுகங்கள் மீது தாக்குதல்!

ஆடி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் காலம் முடிவுக்கு வருகிறதாம்!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆரோக்கியமற்ற துரித உணவுகளுக்கு தடை!

வைகாசி 4, 2026
இலங்கை

மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொருத்திய வாகனங்களுக்கு கடும் நடவடிக்கை!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube