Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் பொருத்தும் எந்த திட்டமும் இல்லை – இலங்கை விமானப்படை!

Trincomalee | Thrukoneshwaram | HinduTemple | Radar Fixing | Airforce | SriLanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் திட்டங்கள் எதுவும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள திருகோணேச்சேரம் ஆலய நிர்வாக சபையின் வாழ்நாள் உறுப்பினர் சி. ஜெயசங்கர், ரேடார் அமைப்பை நிறுவுவதற்காக ஆலய நிலத்தின் ஒரு பகுதியை கடற்படை கோருவதாகத் தெரியவந்துள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறித்து இலங்கை விமானப்படை ஒரு உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.

“திருகோணேச்சரம் ஆலய வளாகத்திலோ அல்லது அதைச் சுற்றியோ எந்தவொரு ரேடார் அமைப்பையும் நிறுவ இலங்கை விமானப்படைக்கு எந்தத் திட்டமும் இல்லை. மேலும், இந்த நோக்கத்திற்காக எந்த நிலத்தையும் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என விமானப்படையின் ஊடகப் பணிப்பாளர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படை, நாட்டின் வரலாற்று மற்றும் சமயத் தலங்களின் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் எப்போதும் மதித்து வந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தில் அபிவிருத்திப் பணிகளையோ அல்லது இராணுவக் கட்டமைப்புகளையோ மேற்கொள்ளும் நோக்கம் விமானப்படைக்கு இல்லை.

மேலும், எந்தவொரு உத்தியோகபூர்வ விசாரணையுமின்றி இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவது, அப்பகுதி மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையை ஏற்படுத்துவதோடு, விமானப்படை மீது ஒரு தவறான மனப்பான்மையையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, இந்தச் செய்தி ஒரு பொய்யான செய்தி என்பதை உங்களுக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம், என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபர் தப்பியோட்டம்!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் பணபரிமாற்றத்தின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லுனுகலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தீ பரவல்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube