Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியங்களை வழங்கும் முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய QR குறியீடு முறையானது, உர விநியோகத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த QR முறையின் ஊடாக விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றிற்கு 2,000 ரூபா நிதி மானியம் நேரடியாக வழங்கப்படுகிறது.

கடந்த 2024/2025 முழு ஆண்டிலும் 84,472 விவசாயிகள் மாத்திரமே மானிய உரத்தைப் பெற்றிருந்தனர். ஆனால், புதிய QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 187,759 விவசாயிகள் உரத்தைப் பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 122.3 வீத வளர்ச்சியாகும்.

மார்ச் மாத இறுதியில் 21,117 மெட்ரிக் டொன் உர விநியோகம் நிறைவடைந்துள்ளன. இது முந்தைய காலப்பகுதியை விட 62.2 வீதம் அதிகமாகும்.

பழைய முறைமையில் உர விநியோகத்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் தாமதங்களை இந்த கியூ.ஆர். தொழில்நுட்பம் முற்றாகத் தவிர்த்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள உண்மையான விவசாயிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி உர மானியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை 334,256 (50 கிலோ கிராம்) உர மூடைகளும், 176,199 (25 கிலோ கிராம்) உர மூடைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கரவண்டி டிப்பர் வாகனத்துடன் மோதியதில் ஒருவர் பலி!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்ட தேரர்கள் துறவறத்தை கைவிட வேண்டும்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 263 மனித என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 2, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் பாரபட்சம் – நாமல் ராஜபக்ஷ !

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube